ஏற்றப்பாட்டு contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் போரூர் முருகன் துணை. பழனியாண்டவர் தோத்திரமென்னும் சிவ சுப்ரமண்யர் அகவல். சென்னை - சூளை சி. வே. துரைசாமி முதலியார் அவர்களது பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில்பதிப்பிக்கப்பட்டது 34, ஆண்டியப்பநாயக்கன் தெரு, சூளை, மதராஸ் 1923
Contents | Home

விநாயகர் காப்பு. சுந்தராந்தனெனுஞ் சோதிசுப்ரமண்யன்மேற் செந்தமிழாலேயகவல் செப்புதற்குவந்தருளும் விந்தைமிகுங்கந்தருக்கு மேலாகிமுன்பிறந்த தந்திமுகச்சுர்திரன்றாள் காப்பு. அகவல். தந்திமுகற்கிளைய கந்தாசரணம் அந்திரவானவர்க் கதிபாசரணம் சரணஞ்சரஹண பவனேசரணம் அரஹரசத்ரு சங்கராசரணம் சத்திவேலேந் துஞ் சாமியேசரணம் சித்திரமயின்மேற் செல்வாசரணம் அமரர்கள் பணியு மமலாசரணம் தமியேன்வினையைத் தவிர்ப்பாய்சரணம் கோலாகலனே குமராசரணம் பன்னிருகையிற் பரமனாற்மழுவும் பாங்குடனெடுத்துக் காங்கையாவாவா பச்சைமயிலேறிப் பாகுமென்மொழியா நச்சுதேணிகர்விழி நாயகிமார்கள் இருபுறமிலங்க விமையவர்போற்றச் சுருதியார்ப்பத் துறந்தவர் துதிப்பக் கோலாகலத்துடன் குமரனேயென்றன் மேலாயருள்வைப் பாயேவேலா கந்தாவாவா கடம்பாவாவா வந்தாள் மயின்மேல் மணியேவாவா படிகொடு தூதர்கள் பாசம்விட்டெரிந்துயிர் கொடுபோவதற்குக் கொடுமையாய்வருங்காற் பஞ்சமாபாவியேன் பயந்துநடுங்குஞ் சஞ்சலம்வராமற சண்முகாகாக்க பாயும்புலியு நோயுமுறுமல் மாயவலையில் மயங்கிநில்லாமல் கார்க்கக்கார்க்கக் கடவுளேகார்த்து சேர்க்கச்சேர்க்கவுன் றிருவடிநிழலில் அம்பலவாண னருமைபுத்திரனே நம்பினேலுன்னை நமக்கடைக்கலந்தா மாலோன்மருகா மயிலோன்சரணம் குரமாதிலங்குங் கொண்காசரணம் துறவோர்போற்றுந் தூயோய் சரணம் திங்களைத் தரித்த சிவனதுபுதல்வா செங்கையில்வேலணி செம்மலேவாவா சரவணபவனெனும் மடியார் தமக்கே அருகேநிற்கு மண்ணலேவாவா திருச்செந்தூர்வாழ் செல்வியோய்வாவா திருப்பெருங்குன்றத் துறையோய்வாவா குருபரவேலா குமராவாவா ஒருகையில்வேலு மொருகையிற்பிரம்பும் மூன்றுகையில் முனையொளிர்வாளும் நான்குகையி னல்லசூலமும் ஐந்துகையி லங்குசபாசமும் ஆறுகையில் வீறுகோடாலியும் ஏழுகையி னிடிக்குந்தெண்டமும் எட்டுக்கையினிற் பட்டமுமிலங்க ஒன்ப துகையில் சங்குசக்கரமும் பத்துகையிற் படை பீரங்கியும் பதினொருகையிற் சிதரிடுவெடியும் அல்லும்பகலும் பில்லிசூனியமும் ஆடும்பேயு நாட்டைவிட்டோட அடியடிபிடிபிடி நெறிநெறிமுறிமுறி போடிபடபொடிபட எறிஎறிவேலினால் அன்னையுநீ என்னப்பனுநீயே சென்மப்பிணிக்குத் தேசிகநீயே அருமையாய்வந்தே திருவருள் புரிந்து சிறியனைக்கார்க்குஞ் சிவமலைக்கந்தா அந்திற்சொக்க ரருளியபாலகா மந்திரகிரிமேல் வளருகாங்கயனே அழகாமேருவி மூலகுகிரியில் எழிலோடமரு மெம்பெருமானே பலமலைகளிலும் பலவிளையாடி நிலைபெறுவயிர நீண்முடியோனே அந்தமிழெனக்கே யன்புடன்றாநீ குருந்தமாமலையிற் குடிகொண்டவனே அன்னமுமுடையு மதியபாக்கியமும் மன்னாதா நீ மருதக்கிரியோய் என்றுமென்னை இடுக்கண்ணுளுமல் பொன்மலைக்குமரா போற்றினேனுன்னை அண்டவாத வரையாப்பிருமல் கண்டமாலையுங் காய்ச்ச லுங்குளிரும் இன்னம்பலபல வியாதிகளெல்லாம் உன்றன்பெயரு முன்னண்ணன்பெயரும் நினைத்து நீறள்ளி நீட்டியேபோட்டால் கனத்தகாற்றிற் பஞ்சுபோற்கடிதில் ஓடிடுமன்றோ வொண்ணுதலுமையாள் பீடுறு சுதனே வாழ்பெருமானே ஆதியில்செய்த வினைய மூதேவி முறிஞ்சோடவு முடுக்குமுருகையா உன்றிருநீருகண்டால் சீரிவருமிருகம் சிங்கமண்டாது சிவகிரிக்கந்தா அன்ணாடமயிலேறி என்னேரம்வருவாய் இடும்பனைக் கூட்டி இக்ஷணம்வருவீர் அத்தமுநாளும் சித்திரைமாதம் நித்தியவருவாய் வெற்றிவேலவனே வைகாசிமாதம் ஒய்யாரமாக மெய்யாவாவா வேலாயுதனே ஆனியிலொருநாள் சரவண முருகா ஆடிமாதம் நாடுவே னுன்னை தேடியேவந்து சிவபதந்தாரும் ஆவணிதனிலுன் சேவடிகாணக் கோபுரம்விட்டுக் குமராவாவா எப்போதுநீயும் இப்பவேவந்து அற்பசிமாதம் அருள் தருவரசே நித்தியமுன்னைத் தோத்திரம்செய்யக் கார்த்திகைமாதம் கருதிவாகந்தா ஆரணப்பொருளே காரணமூர்த்தி மார்கழிமாதம் வந்தெனைக்காரும் ஐயாஐயர் வையாபுரியான் பையவேவாரும் சாமிசண்முகனே பாசுபதமும் அமரர்வைபோகமும் மாசியில்வந்து வரந்தரவேண்டும் சங்கரி பெற்ற துங்காசங்க பங்குனிமாதம் பழனிப்பண்டிதனே ஆயன்மருகா மலையேஸ்பரனே ஞாயர்வாரம் ரட்சிப்பாய்வந்து மங்கைபங்காளா செங்கையில்வேலா திங்கட்கிழமைவாருஞ் சேவலங்கொடியோய் பவளமதை நீக்கித் தவமது தருக செவ்வாய்க்கிழமை மெய்யாவாரும் பதமதுகொடுத்து விதவிதமான புதன்கிழமைவாரும் பொன்மலைவேலா வியாழன்வாரும் வேலாயுதனே புள்ளிமாநீன்ற வள்ளிநாயகனே வெள்ளிக்கிழமை வெளிவரவேணும் புன்மயிலேறித் தினக்குறத்தியும் நீயும் சனிக்கிழமைவருவாய் சரவணதுரையே சவுந்தரவல்லி சதாசிவம்பரிதந்த சரவணபவனே சிக்கந்தமலையில் தாமரைப்பொய்கையில் நேர்மையாய்வளர்ந்து சோமனைத் தரித்த சொக்கரிடம்நான் தவிர்ந்துவாடாமல் வரந்தரவேணும் பழனாபுரியிற் சரவணபவனே சந்திரன்துலங்க இந்திரனிலங்க சிந்தையில்வந்து சிவபதந்தாரும் தஞ்சமென்றுன்னைப் போற்றினேன்முருகா நெஞ்சுக்குமேலே நின்றிடுகுமரா. சுப்ரமண்யர் அகவல் முற்றிற்று.
Contents | Home